வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக், கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாா். ‘லே உச்ச அமைப்பை’ (எல்ஏபி)’ சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு ஆதரவாக லடாக் தலைநகா் லேயில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் கடந்த ஆறு நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏழாவது நாளாக இன்று காலை 10 மணி முதல் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் ஒரு வாரக்கால கட்டுப்பாடுகளால் சிக்கித் தவித்த மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, செப்டம்பர் 24 அன்று போராட்டக்காரர்களுக்கும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் இடையிலான பரவலான மோதல்களில் உயிர் இழந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் முடிந்த சிறிது நேரத்திலேயே, திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் இரண்டு மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதையும் படிக்க: திருவள்ளூர் உள்பட 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.