போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  படம் - ஏஎன்ஐ
இந்தியா

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

ராஜஸ்தான் பல்கலை. வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டத்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான் பல்கலைக் கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியை துணை வேந்தர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தின் முக்கிய வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கல்வி நிலையத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதம் சார்ந்த அமைப்புகளின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிக்க | பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

RSS program in Rajasthan University premises NSUI held a protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT