ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கப்பட்டுள்ளார்.
தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி கலால் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா எதுவும் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கவில்லை. மேலும், சமூகவலைதளங்களில் கருத்து கூறவில்லை.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 37 வயதான ராகவ் சத்தா, ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். இதனால், அவருக்கு துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக கட்சியின் புதிய துணைத் தலைவராக அஷோக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் உள்பட உயர்நிலைத் தலைவர்கள் குறித்து மௌனம் காத்து வரும் ராகவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகவ் சத்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவை செயலகத்திற்குத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் ஏழு பேர் பஞ்சாபிலிருந்தும் மூன்று பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவரான ராகவ் மீது நடவடிக்கைஎ எடுக்கப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.