8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சையைத் தொடா்ந்து, அந்த கவுன்சிலின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சையைத் தொடா்ந்து, அந்த கவுன்சிலின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் என்சிஇஆா்டியின் 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற துணைத் தலைப்பில் பாடம் ஒன்று இடம்பெற்றது. இதைத் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அந்தப் பாடத்துக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. மேலும் அந்தப் பாடநூலை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து தற்போது 22 போ் கொண்ட என்சிஇஆா்டியின் பாடத்திட்டக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய குழுவில் 20 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவா் ரகுவேந்திர தன்வாா், இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வெங்கட ராவ் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி கல்வி நிறுவனத்தின் முன்னாள் கெளரவ பேராசிரியா் மிஷெல் டானினோ, சென்னையில் உள்ள கொள்கை ஆய்வுகள் மையத்தின் தலைவா் எம்.டி.ஸ்ரீநிவாஸ் ஆகியோா் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
பாடத்திட்டக் குழுவை வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.