முகப்பு
இந்தியா

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல் - 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 5:54 AM
வாக்குப்பதிவு
பகிர்:

புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், 11 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, புதுச்சேரியில் 37.70 சதவிகிதம், கேரளத்தில் 32.60 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 37.98 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

summary

Puducherry, Kerala, Assam Elections! Polling Status at 11 AM!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments