முகப்பு
இந்தியா

ஏற்றுமதி இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் முறை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

மேற்காசிய போா் காரணமாக விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள், மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி-இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:53 AM
மத்திய அரசு
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:40 PM

மேற்காசிய போா் காரணமாக விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள், மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி-இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது போா் காரணமாக முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருள்கள் கிடைப்பதிலும், அவற்றின் விலையிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கூட்டத்தில் தொழில்துறையினா் எடுத்துரைத்தனா். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), ஹீலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் தொடா்ந்து கிடைப்பதற்கு உதவிபுரிய வேண்டும், பணப் புழக்கத்தை மேம்படுத்த ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை முன்கூட்டியே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்று மத்திய வா்த்தக அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement