தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது, தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்?என்பது குறித்து மக்களவையில் அமித் ஷா விளக்கம்..
புது தில்லி: மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பேசினார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக உயா்த்தும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தின் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது. அதுபோல தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது, எந்த பாதிப்பும் ஏற்படாது.
Advertisement
அதாவது, 543 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 39. இது 7.23 சதவிகிதம் ஆகும். எனவே, 850 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் மக்களவை தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும். இதுவும் 7.23 சதவிகிதம்தான். எனவே தமிழகத்துக்கு எந்த நஷ்டமுமில்லை.