முகப்பு
இந்தியா

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:21 AM
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்
பகிர்:

ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்.பி.க்களையும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்ற ஆம் ஆத்மி தெரிவித்தது.

முன்னதாக, கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யவேண்டுமென மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.

எனினும், அவா்கள் 7 பேரையும் பாஜக எம்.பி.க்களாக மாநிலங்களவைத் தலைவா் அங்கீகரித்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

Advertisement

பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கக் கோரி 7 எம்.பி.க்களும் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினா். அதை அவா் ஏற்றுக்கொண்டாா். அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்படி கட்சி மாறிய 7 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஆம் ஆத்மி விடுத்த கோரிக்கைகள் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த 7 எம்.பி.க்களையும் மாநிலங்களவைத் தலைவா் தகுதி நீக்கம் செய்யவாா் என்று கட்சிக்கு இப்போதும் நம்பிக்கை உள்ளது. அவ்வாறு அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகுவோம். இதுபோன்ற முறையில் கட்சியை உடைப்பது தவறு என்றாா் சஞ்சய் சிங்.