முகப்பு
இந்தியா

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி!

பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதற்காக மட்டும் ரூ. 2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 7:40 AM
கோப்புப் படம்
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதற்காக மட்டும் ரூ. 2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் உட்பட, பாதுகாப்பு அமைச்சகத்திடம் பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவப் பொறியாளர்கள், பராமரிப்பாளர்கள் என ராணுவத்துடன் இணைந்து பணிபுரியும் சீருடை அல்லாத பணியாளர்களுக்காக ரூ. 28,554.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 0.4% குறைவு.

பாதுகாப்புத் துறை சேவைககளுக்காக ரூ. 3,65,478.98 கோடி. இது கடந்த ஆண்டை விட 17.24% அதிகம்.

மூலதனச் செலவுகளுக்காக ரூ. 2,19,306.47 கோடி. இது கடந்த ஆண்டை விட 21.8% அதிகமாகும்.

பாதுகாப்புத் துறை ஓய்வூதியத்துக்காக ரூ. 1,71,338.22 கோடி. கடந்த ஆண்டை விட 6.53% அதிகம்.

மத்திய பட்ஜெட் அறிக்கையிலிருந்து
summary

Defence Ministry allocated a budget of Rs 7.8 lakh crore for the year 2026-27.

முழு கட்டுரையைப் படிக்க →