முகப்பு
இந்தியா

லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 8:11 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பகிர்:

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

சுமார் 1.23 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்திய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், லித்தியம் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சுங்க வரி விலக்கை நீட்டிப்பு செய்துள்ளார்.

மேலும், சோலார் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோடியம் ஆன்டிமோனேட் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இந்தியாவில் முக்கியமான கனிமங்களை பதப்படுத்துவதற்குத் தேவையான மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

summary

Finance Minister Nirmala Sitharaman on Sunday announced an extension of basic customs duty exemption on capital goods used for manufacturing lithium-ion cells for battery storage in the annual budget for the next financial year.

முழு கட்டுரையைப் படிக்க →