இந்தியாவில் தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.
இந்தியாவில் தரவு மையங்களுக்கு வரும் 2047ஆம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அதாவது வரி விடுமுறை (Tax Holiday) அளிக்கப்படும்
நாட்டில் மாநிலங்களுக்கான ரூ. 1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதாவது, மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையின்படி ரூ.1,14,000 கோடி நிதி வழங்கப்படும்.
16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும்.
முன்னதாக, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு இருந்ததே உச்ச வரம்பு நீடிக்கிறது.
புதிய வரி விதிப்பு முறையில்,
குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி விதிப்பு இல்லை.
ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி
ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி
ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி
ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.
அவர் வருமான வரிக் கணக்கு மற்றும் வரிச் சட்டம், வரி விலக்குகள் குறித்த அறிவிப்பில்,
வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும்.
வெளிநாட்டு சுற்றுலாவுக்கன வரி பிடித்தம் 2 சதவீதமாகக் குறைக்கப்படும்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாகிறது.
வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை அறிவிக்கப்படும்
வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அறிவிக்கப்படும்.
மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2026-27 இல், தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை – பெங்களூரு
சென்னை – ஹைதராபாத்
நாடெங்கும் 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.
தனியார் துறையோடு இணைந்து நாடெங்கும் மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேத மருத்துவத்துக்கு நாடெங்கும் 3 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
சேவைத் துறையில் இந்தியா உலக அரங்கில் முன்னணியில் திகழ புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
மருத்துவ துறை சார்ந்த தொழில்நுட்ப கல்வி, சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களை உருவாக்க திட்டம்
திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
நாட்டில் 5 பல்கலை நகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
ஆயுர்வேத மருந்தகங்கள் தரம் உயர்த்தப்படும்
சுற்றுலா துறையை மேம்படுத்த தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
கரிம ஈர்ப்பு மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு
நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும். பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு வளர்ச்சியை எட்ட அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் தொடர்ந்து நிலையான விகிதத்தில் இருந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என அறிவிப்பு
மும்பை – புனே
புனே – ஹைதராபாத்
ஹைதராபாத் – பெங்களூரு
ஹைதராபாத் – சென்னை
சென்னை – பெங்களூரு
புது தில்லி – வாராணசி
வாராணசி – சிலிகுரி
வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகள் முன்மொழியப்பட்டதாகக் கூறினார்.
7 எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அளவிடுதல்.
பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல்.
சாம்பியனான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல்
உள்கட்டமைப்பு உந்துதல்
நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்
நகரப் பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல் என வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 6 துறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஐஎஸ்எம் 1.0 மற்றும் ஐஎஸ்எம் 2.0 மிஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஐபியுடன் செமி கண்டக்டர் உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயோஃபார்மா துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
பயோ-ஃபார்மா துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர அண்மையில் 350க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன என்றார்.
எம்எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.
அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.
நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.
3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.
அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்
மிகச் சரியாக முற்பகல் 11.01க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.
தொடர்ச்சியாக 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிகச் சரியாக முற்பகல் 11.01க்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஓவியத்தை வரைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய நிதிநிலை அறிக்கையாகும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் சாதனை படைத்துள்ள அவர் மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் தன்னைத் தேர்ந்தெடுத்த கர்நாடக மாநிலத்துக்கு தனது எம்.பி. நிதியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முற்பட்டோம்.
2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 296 புள்ளிகளுடனும் நிஃப்டி 122 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கின.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
மத்திய பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெறும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகார்கள் உடன் இருந்தனர்.
வரும்2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.