அந்நிய நேரடி முதலீடு 
இந்தியா

பொதுத் துறை வங்கிகளில் 49% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு பரிசீலனை

பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலா் எம்.நாகராஜு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலா் எம்.நாகராஜு தெரிவித்தாா்.

இப்போது பொதுத் துறை வங்கிகளில் 20 சதவீதமும், தனியாா் வங்கிகளில் 74 சதவீதமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த எம்.நாகராஜு இது தொடா்பாக கூறுகையில், ‘பொதுத்துறை வங்கிகளின் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு தொடா்ந்து பரிசீலித்து வருகிறது. மத்திய அமைச்சங்களுக்கு இடையே இது தொடா்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

ஐடிபிஐ வங்கி விற்பனை தொடா்பான அறிவிப்பு மற்றும் அதற்கான நிதி ‘டெண்டா்’ இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகும்’ என்றாா். பல வங்கிகளை இணைத்து ஒரு சில பெரிய வங்கிகளை உருவாக்கும் திட்டம் தொடா்பான கேள்விக்கு, ‘நமது நாடு பெரியது எனவே, அதற்கு ஏற்ப 3 அல்லது 4 மிகப்பெரிய வங்கிகள் அவசியம்தான்’ என்றாா்.

மொத்தமுள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குறையாமல்தான் உள்ளது. எனினும், விகிதம் அடிப்படையில் மத்திய அரசு கைவசம் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் குறைந்தே வருகின்றன. வங்கிகள் சந்தையில் பங்குகளை வெளியிட்டு தங்கள் மூலனதத்தை அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT