முகப்பு
இந்தியா

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 2 பிப்ரவரி 2026, 7:10 pm IST
புல்லட் ரயில் (கோப்புப் படம்)
பகிர்:

புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு 1.13 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது:

”தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 2009-14 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரி ஒதுக்கீடு ரூ. 879 கோடியாக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் 9 மடங்கு உயர்ந்து ரூ. 7,611 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் ரயில்வே துறைக்கு ரூ. 7,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இரண்டு புதிய புல்லட் ரயில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன

புல்லட் ரயிலின் மூலம் சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்களில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல முடியும்; சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் செல்ல முடியும்” என்றார்

நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம், 508 கி.மீ. தொலைவுடையது.

இது குஜராத் மற்றும் தாத்ரா-நகா் ஹவேலியில் 352 கி.மீ., மகாராஷ்டிரத்தில் 156 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன பொறியியல் நுட்பங்களுடன் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படுகிறது. இதில் 465 கி.மீ. அதாவது 85 சதவீதம் பாலங்களைக் கொண்டதாகும்.

இந்த புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது, மும்பை-அகமதாபாத் பயண நேரம் 2 மணி நேரம் 17 நிமிடங்களாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Union Railway Minister Ashwini Vaishnaw has stated that it will be possible to travel from Chennai to Bengaluru in 1.13 hours by bullet train.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.