இந்தியா

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் இறக்கைகள் உரசி செவ்வாய்க்கிழமை சிறு விபத்து ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் இறக்கைகள் உரசி செவ்வாய்க்கிழமை சிறு விபத்து ஏற்பட்டது.

ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய இண்டிகோ நிறுவனத்தின் 6இ791 விமானம் மற்றும் மும்பையில் இருந்து கோவைக்கு புறப்படத் தயாராக நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ2732 விமானம் ஆகியவற்றின் இறக்கைகள் உரசின.

இந்தச் சம்பவத்தின்போது இரு விமானங்களிலும் பயணிகள் இருந்தபோதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தை இரு விமான நிறுவனங்களும் உறுதிப்படுத்தியதோடு பயணிகள் பாதுகாப்பாக விமானங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, இரு விமானங்களிலும் சோதனைகள் தொடங்கப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் மும்பை விமான நிலையத்துக்கு விரைந்தார்.

தலைமை இயக்குநரகம் விரைவில் முழு விசாரணைக்கு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போடிநாயக்கன்பட்டி ஏரிக் கரைக்கு மா்ம நபா்கள் தீவைப்பு

லாரியின் பின்பக்க கதவு மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரிமைகள் பறிப்பு: இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.பி.க்கள் பேட்டி

2030-இல் மறுசுழற்சி சந்தை 300 பில்லியன் டாலராக உயரும்!

சேலம் வனக் கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

SCROLL FOR NEXT