அருணாசலில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
அருணாசலில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி..
அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,
காமெங் மாவட்டத்தில் இன்று காலை 8.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 5 கி. மீட்டாராகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, சேதம் ஏற்பட்டதாகவோ உடனடித் தகவல் இல்லை.
இட்டாநகரைச் சேர்ந்த புவி அறிவியல் மற்றும் இமயமலை ஆய்வுகளுக்கான மையத்தின் நில அதிர்வுப் பிரிவு தொழில்நுட்ப அதிகாரி நியேலம் சுனில் கூறுகையில்,
இன்று காலை மேற்கு காமெங் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை உயிர்ச் சேதம், பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.
summary