கெம்சந்த் சிங் 
இந்தியா

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் கெம்சந்த் சிங்!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க கெம்சந்த் சிங் உரிமை கோரல் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூரில் என்டிஏ சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் யும்நாம் கெம்சந்த் சிங் மாநில முதல்வராக ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக பாஜக தலைவர் ஏ. ஷாரதா தேவி தெரிவித்தார். 

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினர் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 

இந்த வன்முறை காரணமாகக் கடந்தாண்டு பிப். 9 மாநிலத் முதல்வர் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தாண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 

இந்த நிலையில், புது தில்லியில்  உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மணிப்பூரின் புதிய முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது. 

கெம்சந்த் சிங் தலைமையிலான என்டிஏ குழு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து மாநில முதல்வராக அரசு அமைக்க உரிமை கோரியது. இவருடன் சுராசந்த்பூர மற்றும் பெர்சாவல் ஆகிய இரண்டு மாவட்ட எம்எல்ஏக்களும் ஆளுநரைச் சந்தித்தனர். 

மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க என்டிஏ உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது. 

NDA legislature party leader Y Khemchand Singh on Wednesday staked a claim to form a government in Manipur, state BJP chief A Sharda Devi said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.90.43ஆக நிறைவு!

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ்!

துணை வேந்தர்கள் நியமனம்: தமிழக அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து!

சீன அதிபருடன் ரஷிய அதிபர் புதின் உரையாடல்!

பட்ஜெட்டில் ஒப்புக்காவது திருக்குறள் இருக்கும்... இந்தாண்டு அதுகூட இல்லை: முதல்வர்

SCROLL FOR NEXT