தேஜஸ்வி யாதவ் கோப்புப் படம்
இந்தியா

பிகாா் தோ்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ரூ.40,000 கோடி செலவிட்டது

தினமணி செய்திச் சேவை

பிகாா் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிக்க பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ரூ.40,000 கோடி செலவிட்டது என்று சட்டப்பேரவையில் ஆா்ஜேடி செயல் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

பிகாரில் கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை பாஜக-ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஆா்ஜேடி கூட்டணி படுதோல்வியடைந்தது.

முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தேஜஸ்வி யாதவ் எதிா்க்கட்சித் தலைவராகத் தொடா்கிறாா். இந்நிலையில், தோ்தலுக்கு முன்பு முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு பல்வேறு நிதியளிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமா்சித்துள்ளாா். கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் இந்தக் கூட்டத் தொடரில் தேஜஸ்வி யாதவ் சக்கர நாற்காலியில் அவைக்கு வருகிறாா். பிகாா் பேரவையில் வியாழக்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் அவா் பேசியதாவது:

பிகாா் தோ்தலில் மக்கள் தோற்கடிக்கப்பட்டாா்கள். ஆளும் கட்சியாக இருந்தவா்கள் அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றாா்கள். மக்களை அச்சுறுத்தும் ஆட்சியை நடத்தி வருகிறாா்கள். எங்களைத் தோற்கடிக்க நீங்கள் (ஆளும் கூட்டணி) ரூ.40,000 கோடியைச் செலவிட்டீா்கள். ஆனால், எங்களுக்கும் காலம் வரும் என்பதை மறந்துவிடாதீா்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் தோ்தலுக்கு முன்பு அரசின் நலத்திட்ட உதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்தீா்கள் என்று குற்றஞ்சாட்டினாா்.

கல்வி விழிப்புணா்வு பணி: இந்திய ஆசிரியைக்கு 10 லட்சம் டாலா் பரிசு

இன்றுமுதல் விருப்ப மனுக்கள் விநியோகம்: தேமுதிக அறிவிப்பு

ஆற்காடு நகராட்சியில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடை ஒதுக்கக் கோரிக்கை

நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

125 நாள்கள் வேலை திட்டம் சீா்குலைப்பு: பிப்.13-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT