முகப்பு
இந்தியா

ரீல்ஸ் எடுக்கும்போது நடந்த சோகம்: உ.பி.யில் 4வயது மகள் கண்முன்னே தாய் பலி!

உத்தரப் பிரதேசத்தில் ரீல்ஸ் எடுக்க முயன்று 4 வயது மகளின் கண்முன்னே தாய் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:48 AM
- IANS
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ரீல்ஸ் எடுக்க முயன்று 4 வயது மகளின் கண்முன்னே தாய் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் மோகினி. இவர் தனது நான்கு வயது மகளின் முன் தூக்கில் தொங்கும் காட்சியை வெள்ளிக்கிழமை ரீல்ஸ் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது சேலை இறுதி அவர் பலியானர்.

இதுகுறித்து அதிகாரி சௌரப் சிங் கூறுகையில், அந்தப் பெண் ரீல்ஸுக்காக தூக்கில் தொங்கும் காட்சியை நடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், அந்தச் செயலின் போது அவர் சுயநினைவை இழந்து பின்னர் பலியானார். உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மோகினியின் மொபைல் போனை பரிசோதித்ததில், கூகிள் மற்றும் முகநூலில் தூக்கில் தொங்குவது தொடர்பான காட்சியை அவர் பலமுறை தேடியது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்த அவரது நான்கு வயது மகள், தனது தாயார் தனது செயலை விடியோ பதிவு செய்யச் சொன்னதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

மோகினியின் கணவர் ஜெகதீஷ், தனது மனைவி மொபைல் போனை மகளிடம் கொடுத்துவிட்டு, தூக்கில் தொங்குவது போல் ரீல்ஸைப் படம்பிடிக்க சேலையைக் கட்டி கயிறாக பயன்படுத்தியதாக போலீஸாரிடம் கூறினார். பெண் மயக்கமடைந்ததும், குழந்தை அழத் தொடங்கியது.

அக்கம்பக்கத்தினர் வரவழைக்கப்பட்டு மோகினி கீழே கொண்டு வரப்பட்டார். பிறகு அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் பலியாகிவிட்டதாக அறிவித்தனர் என்றார்.

summary

A 27-year-old woman died while attempting to recreate a hanging scene in front of her four-year-old daughter, whom she told to shoot the act for a reel, in Uttar Pradesh's Banda district, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.