முகப்பு
இந்தியா

உ.பி. சிறுமிகள் தற்கொலை! கடிதத்தில் தாய் பற்றி குறிப்பிடாதது ஏன்? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

உ.பி. சிறுமிகள் தற்கொலைக் கடிதத்தில் தாய் பற்றி குறிப்பிடாதது பற்றிய விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:24 PM
3 சகோதரிகள் தற்கொலை
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:24 PM

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது தளத்திலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், கொரியன் கேமுக்கு அடிமையாகியிருந்த மூன்று சிறுமிகள், கடந்த வாரம் தங்கள் வீடு இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:36 PM

நள்ளிரவில் கேட்ட அபயக் குரலால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர், சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் சிறுமிகள் மூவரது உடல்களும் கிடந்தன.

Advertisement

அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் வாழ்ந்து வந்த சிறுமிகளின் குடும்பத்தினரைப் பற்றி காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

முதற்கட்ட விசாரணையில், மூன்று சிறுமிகளும் சகோதரிகள்தான், ஆனால் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள். அவர்களது தந்தை சேதன் குமார் மற்றும் அவரது மூன்று மனைவிகளும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

சேதன் குமாரின் மூன்று மனைவிகளான சுஜாதா, ஹீனா, டீனா ஆகியோர் சகோதரிகள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு சேதன் குமாருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து மரணம் அடைந்திருக்கிறார். பிறகு விசாரணையில், அது தற்கொலை என வழக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:36 PM

இதுபோன்ற பல காரணங்களாலும், சேதன் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார்.

இதற்கிடையே, சிறுமிகள் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்திலும், அவர்களது தந்தையிடம் மன்னிப்புக் கேட்பது போன்றுதான் எழுதியிருக்கிறார்களே தவிர, தாய் குறித்து எதுவும் எழுதவில்லை. இதுவும் காவல்துறைக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

சிறுமிகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளதும், சிக்கலான குடும்ப முறையும், கையில் செல்போன் இருந்ததால், கேம் உள்ளிட்டவற்றுக்கு அடிமையான சிறுமிகள் கடைசியாக தற்கொலை செய்து கொண்டிருப்பது, நாட்டில் செல்போனுக்கு அடிமையாகும் பிள்ளைகளை உடனடியாக பெற்றோர் மீட்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:25 PM

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.