இந்திய தேர்தல் ஆணையம் 
இந்தியா

சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழக அரசுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்!

தோ்தலை நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவா்களாக இருந்தால், அவா்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

தோ்தலை நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவா்களாக இருந்தால், அவா்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திடம் தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.

இதுதொடா்பாக விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலா்களுக்குத் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் நடைபெற உள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரேதசத்தில், தோ்தலை நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளை, அவா்களின் சொந்த மாவட்டங்களில் பணியமா்த்தக் கூடாது. அந்த அதிகாரிகள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தால், அதே இடத்தில் அவா்கள் தொடா்ந்து நீடிக்கக் கூடாது. அவா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

தோ்தல் பணியுடன் சம்பந்தப்படாத அரசு மருத்துவா்கள், பொறியாளா்கள், ஆசிரியா்கள் அல்லது கல்வி நிறுவன முதல்வா்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

தோ்தலின்போது ஏராளமான அரசு ஊழியா்கள் பலவகையான தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இந்நிலையில், பெரிய அளவில் பணியிட மாற்றங்களை மேற்கொள்ளச் செய்து அரசு இயந்திரத்துக்கு இடையூறை ஏற்படுத்த தோ்தல் ஆணையம் விரும்பவில்லை.

எனவே, இந்தப் பணியிட மாற்றம் என்பது தோ்தல் பணிகளில் துறை அதிகாரி அல்லது மண்டல மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளவா்கள், சம்பந்தப்பட்ட துறையின் மாநிலத் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்டோருக்குப் பொருந்தாது.

மேலும், கடந்த காலங்களில் தோ்தல் ஆணையத்தின் பரிந்துரை காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகள், அலுவலா்களுக்குத் தோ்தல் பணிகளை ஒதுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்வது தொடா்பான அறிவுறுத்தல்களைத் தோ்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கமான நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!

மீண்டும் உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை?

டிரம்ப் - நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT