முகப்பு
இந்தியா

போக்குவரத்து விதிமீறல்கள்: பிகாரில் 10 மாதங்களில் ரூ.300 கோடி அபராதம் விதிப்பு

பிகாரில் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.301.28 கோடி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஷர்வான் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:42 PM
சாலைப் போக்குவரத்து - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:04 PM

பிகாரில் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.301.28 கோடி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஷர்வான் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10 மாதங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 301.28 கோடி ரூபாய் மதிப்பிலான 4.97 லட்சம் சலான்கள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:35 PM

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 90.97 கோடி ரூபாய் மதிப்பிலான 1.48 லட்சம் சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்த தொகையான 301.28 கோடி ரூபாயில் இதுவரை 115.23 கோடி ரூபாயை துறை வசூலித்துள்ளது.

Advertisement

இந்த சலான்கள் ஏப்ரல் 1, 2025 முதல் பிப்ரவரி 11, 2026 வரை வழங்கப்பட்டவை. மீதமுள்ள தொகையை வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:35 PM

இதன் நோக்கம் விபத்துகளைக் குறைப்பதே என்று கூறினார். இதனிடையே போக்குவரத்துத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த இரண்டு மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் கைமூர் மாவட்டத்தில் உள்ள பபுவா முதலிடத்தில் உள்ளது.

அங்கு 12.16 கோடி ரூபாய் மதிப்பிலான 30,833 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கோபால்கஞ்ச்சில் 8.34 கோடி ரூபாய் மதிப்பிலான 23,308 சலான்களும், கயாவில் 7.88 கோடி ரூபாய் மதிப்பிலான 16,038 சலான்களும் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The authorities in Bihar have issued 4.97 lakh challans, worth Rs 301.28 crore, for violations of the Motor Vehicles Act and traffic rules on national and state highways in the last 10 months, Transport Minister Sharwan Kumar said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.