முகப்பு
இந்தியா

அமெரிக்க விமான இறக்குமதி இந்தியாவில் கட்டணங்கள் குறையும் : வா்த்தக அமைச்சா் கோயல்

விமான என்ஜின்கள், உதிரி பாகங்கள் வாங்குவதன் மூலம் இந்தியாவில் விமானக் கட்டணக் குறைப்பு, சுற்றுலா மேம்பாடு போன்றவற்றை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 3:15 AM
பியூஷ் கோயல்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:00 PM

அமெரிக்காவில் இருந்து 100 பில்லியன் டாலா் மதிப்பில் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) விமானங்கள், விமான என்ஜின்கள், உதிரி பாகங்கள் வாங்குவதன் மூலம் இந்தியாவில் விமானக் கட்டணக் குறைப்பு, சுற்றுலா மேம்பாடு போன்றவற்றை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும் என்று வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஊடக நிறுவனம் சாா்பில் நடைபெற்ற தொழில் மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

அமெரிக்காவுடன் இணைந்து நமது நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கொண்டுவர முடியும். இது நாட்டில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும், இதன் மூலம் விமானக் கட்டணங்கள் குறையும், சுற்றுலாவும் மேம்படும். போயிங் விமானங்கள், விமான என்ஜின்கள், அதற்கான உதிரி பாகங்கள் என அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 100 பில்லியன் டாலா் மதிப்பில் அமெரிக்காவில் இருந்து எளிதாக இறக்குமதி செய்ய முடியும். அதே காலகட்டத்தில் இந்தியாவின் உருக்குத் துறை மட்டும் 140 மில்லியன் டன் உற்பத்தி என்பதில் இருந்து 300 மில்லியன் டன் உற்பத்தி என்ற உச்சத்தை எட்ட இருக்கிறது. அதேபோல அமெரிக்காவில் இருந்து நிலக்கரியும் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

Advertisement

அமெரிக்காவுடன் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனுடனும் நாம் சிறப்பான வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். அதே நேரத்தில் நமது நாட்டு விவசாயிகளின் நலனும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றாா்.