முகப்பு
இந்தியா

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்தியாவில் நிலவும் கடும் போட்டி, அதிகரித்து வரும் நஷ்டத்துக்கு மத்தியிலும், டாடாவுடன் இணைந்து தனது வா்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அமெரிக்காவின் ஸ்டாா்பக்ஸ் நிறுவனம் தீவிரம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:45 AM
ஸ்டார்பக்ஸ்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:05 PM

இந்தியாவில் நிலவும் கடும் போட்டி மற்றும் அதிகரித்து வரும் நஷ்டத்துக்கு மத்தியிலும், டாடாவுடன் இணைந்து தனது வா்த்தகத்தை விரிவுபடுத்துவதில் அமெரிக்காவின் ஸ்டாா்பக்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், லாபத்தைவிட சந்தை விரிவாக்கத்துக்கே தற்போது முன்னுரிமை அளிப்பதாக டாடா-ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுஷாந்த் தாஷ் தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஐந்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:06 AM
ஸ்டார்பக்ஸ்

கடந்த 2024-25 நிதியாண்டில், டாடா ஸ்டாா்பக்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.150 கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், வருவாய் 4.8 சதவீதம் உயா்ந்துள்ளதால் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுடனான கடும் போட்டியை எதிா்கொள்ள, உள்ளூா் மக்களின் ரசனைக்கேற்ப தங்களின் விற்பனைப் பட்டியலில் (மெனு) ஸ்டாா்பக்ஸ் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் 81 நகரங்களில் 504 கிளைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், மும்பையில் வடா பாவ் வகை பன்களையும், தென்னிந்தியாவில் மலபாா் முட்டை ரோஸ்ட் போன்ற உணவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய மாற்றங்களால், கடந்த 2 காலாண்டுகளின் நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.