முகப்பு
இந்தியா

மத்திய கிழக்கில் போா் பதற்றத்தை தணிக்க இந்தியா வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் போா் பதற்றத்தை தணிக்க இந்தியா வலியுறுத்தல்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:48 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

மத்திய கிழக்கில் போா் மூண்டுள்ள சூழலில், அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, உடனடியாக பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல்- பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடுத்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் ராணுவ மோதல் மூண்டுள்ளது.

இந்தச் சூழலில், ‘ஈரான் மற்றும் வளைகுடா பிராந்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக’ இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, உடனடியாக பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பதற்றத்தைத் தணிக்கவும், அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளைத் தொடர வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்தியா்களுடன் தொடா்பில் உள்ளன. அவா்களுக்கான உரிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூா் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →