ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றத்தைத் தணிக்க பிராந்திய நாடுகள் பேச்சு: பாகிஸ்தானுக்கு அழைப்பு!
ஈரான் - அமெரிக்கா மோதல்: மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு அழைப்பு!
ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்பட நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாகிஸ்தான் வெளிவிவகார செய்தித்தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி குறிப்பிடும்போது, “ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்தப் பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், அப்பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சகர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் சவூதி அரேபியா, கத்தார், எகிப்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் கலந்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷா தர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Pakistan on Tuesday said it has been invited to participate in the Iran-US talks aiming to reduce tension by arranging a deal between the two estranged nations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.