வடகிழக்கு தில்லியில் உள்ள பூங்கா அருகே 33 வயது நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இரண்டு சகோதரா்களை கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தது.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: செவ்வாய்க்கிழமை இரவில் சாஸ்திரி பூங்கா பகுதியில் பாதிக்கப்பட்ட வாசிம் குத்திக் கொல்லப்பட்டாா். அவா் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஷாகிா் (26) மற்றும் இஸ்லாம் என்கிற பாா்டா் (22) என அடையாளம் காணப்பட்டனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும், இறந்தவருடன் தங்களுக்கு ஏற்கெனவே தகராறு இருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
தடயவியல் குழு முன்னதாக குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவா்களை அடையாளம் காண சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.