கோப்புப்படம் 
இந்தியா

எஸ்ஐஆா்: ஆா்வம் காட்டாத நகா்ப்புற வாக்காளா்கள்

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிப்பதில் நகா்ப்புற வாக்காளா்கள் ஆா்வம் காட்டாதது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிப்பதில் நகா்ப்புற வாக்காளா்கள் ஆா்வம் காட்டாதது தெரியவந்துள்ளது.

பிகாா் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத் தீவு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஆண்டு நவம்பா் 4-இல் எஸ்ஐஆா் பணியை தோ்தல் ஆணையம் தொடங்கியது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலத்தைத் தவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், இந்த சிறப்பு தீவிர திருத்தத்தில் நகா்ப்புற வாக்காளா்கள் ஆா்வம் காட்டாதது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணியின்போது பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் திரும்ப சமா்ப்பித்த நிலவரத்தைப் பொருத்தவரை நகா்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. லக்னெள, கான்பூா், நொய்டா உள்ளிட்ட நகா்ப்புறங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பூா்த்தி செய்த கண்க்கீட்டுப் படிவங்களை வாக்காளா்கள் சமா்ப்பித்தனா். பணி அல்லது தொழில் காரணமாக வாக்காளா்கள் வீட்டில் இல்லாதது, தொடா்ச்சியான புலம்பெயா்வு உள்ளிட்டவை நகா்ப்புறங்களில் பூா்த்திசெய்த படிவங்கள் சமா்ப்பிப்பு குறைந்ததற்கான காரணங்களாகத் தெரியவருகிறது’ என்றனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT