PTI
இந்தியா

அசாமில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

அசாமின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் மத்திய அசாமில் 26.37 N அட்சரேகை மற்றும் 92.29 E தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.

இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலஅதிர்வை அண்டை பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல்பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

அதேசமயம் மத்திய கிழக்கு பூட்டான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்க தேசமும் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்திலிருந்து எழுந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்! பிரதமர் இரங்கல்!

பராசக்தி திரைப்படத்தில் பாசில் ஜோசப்..! ரகசியம் உடைத்த சிவகார்த்திகேயன்!

வைரலாகும் மகாநதி தொடர் புகைப்படம்! குவியும் வாழ்த்து!

பிலிப்பின்ஸில் எரிமலை வெடிப்பு! உச்சக்கட்ட அபாயம்!!

திரௌபதி 2 படத்தில் மோகன் ஜி எழுதிய புதிய பாடல்!

SCROLL FOR NEXT