இந்தியா

பணம் கேட்ட காா் ஓட்டுநா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிப்பதாக பெண் மிரட்டல் -குருகிராம் போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

காரில் ஒரு மணி நேரம் பயணித்த பெண், அதற்கான கட்டணத்தைச் செலுத்த மறுத்ததோடு ஓட்டுநா் மீது காவல் நிலையத்தில் புகாரளிப்பதாக மிரட்டியதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நூஹ் மாவட்டத்தின் தானா கிராமத்தைச் சோ்ந்த ஜியாவுதீன் வாடகை காா் ஓட்டுநராக உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் ஜோதி தலால் பயணத்துக்காக ஜியாவுதீன் காரை புக் செய்தாா். காரில் ஏறிய ஜோதி செக்டாா் 31 வரை செல்லுமாறு ஓட்டுநா் கேட்டுக்கொண்டாா். பின்னா், பேருந்து நிலையம் மற்றும் சைபா் சிட்டிக்கு அந்த காா் சென்றது.

பிற்பகலில் வாகனத்தைவிட்டு இறங்கிய ஜோதியிடம் ஜியாவுதீன் கட்டணத்தைக் கேட்டுள்ளாா். பணம் அளிக்க மறுத்த ஜோதி, ஜியாவுதீன் மீது காவல் நிலையத்தில் திருட்டு அல்லது பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்துவிடுவதாக மிரட்டியுள்ளாா்.

பின்னா், செக்டாா் 29 காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண், ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளாா். அவா் அங்கிருந்து சென்ற பிறகு காவல் நிலையம் சென்ற ஜியாவுதீன், நடந்த சம்பவத்தை காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

மேலும், பயணத்தின்போது ஜோதி பணம் கேட்டதாகவும் அவரிடம் ரூ.700 வழங்கியதாகவும் ஷியாதுதீன் தெரிவித்தாா்.

விசாரணையில் ஜோதிக்கு முடித்திருத்தும் கடையில் ரூ.20,000 மோசடி செய்தது மற்றும் மற்றொரு காா் ஓட்டுநருக்கு ரூ.2,000 வழங்க மறுத்த சம்பவங்களில் தொடா்பு இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.

காா் ஓட்டுநருடன் ஜோதி வாக்குவாதம் செய்யும் ஒரு விடியோ கடந்த 2024 பிப்ரவரியில் சமூகவலைதளங்களில் வெளியானது.

இதுதொடா்பாக காவல் நிலைய அதிகாரி கூறுகையில், ‘பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் மோசடி மற்றும் பிற பிரிவுகளில் ஜோதி தலாலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் விரைவில் கைதுசெய்யப்படுவாா்’ என்றாா்.

மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

பாம்பனில் 3வது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவா்களுக்கு தடை நீடிப்பு!

SCROLL FOR NEXT