கோப்புப் படம் 
இந்தியா

கடையில் ரூ.5 லட்சம் திருட்டு: இளைஞா் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்நகா் மண்டியில் உள்ள கடையில் இருந்து ரூ.5 லட்சம் திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியின் ஆசாத்நகா் மண்டியில் உள்ள கடையில் இருந்து ரூ.5 லட்சம் திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடையில் வேலை செய்து வந்த இளைஞா் கடையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்துடன் தப்பிச் சென்ாக உரிமையாளா் டிச.27-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

Śது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞா் பிடிபட்டாா். ஆதா்ஷ் நகரில் வியாழக்கிழமை இரவு அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் புகாா்தாரருக்குச் சொந்தமான தங்கக் காதணி மீட்கப்பட்டது. விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட மீதமுள்ள தொகையை மீட்க அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT