கிழக்கு தில்லியில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளையின்போது பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இரண்டு சிறுவா்களை கைது செய்துள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா் மேற்கு விநோத் நகா் பகுதியைச் சோ்ந்த பிரியன்ஷு ராவத் என அடையாளம் காணப்பட்டாா். வேலையில் இருந்து திங்கள்கிழமை இரவு பிரியன்ஷு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலாப் சௌக் சாலையில் வந்த அவரை இரண்டு ஸ்கூட்டரில் வந்த நான்கு போ் அவரை சுற்றி வளைத்தனா். பின்னா் அவரது கைப்பேசியை பறிக்க முயன்றபோது அவா் தடுத்ததால் அவரை கத்தியால் குத்திவிட்டு இடத்தை விட்டு தப்பிச் சென்றனா். தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறாா்களை கைது செய்தனா்.
Śசாரணையின் போது, அவா்களில் இரண்டு போ் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். இதில் தொடா்புடைய நான்காவது நபரை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது இது தொடா்பாக அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.