Atul Yadav
இந்தியா

அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அவசியம்: அஜீத் தோவல்

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் வலிகள் நிறைந்த வரலாற்றுக்குப் பழிதீா்க்க அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னிலை பெற வேண்டியது அவசியம் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் (என்எஸ்ஏ) அஜீத் தோவல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய வளா்ச்சியடைந்த பாரத இளம் தலைவா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அஜீத் தோவல் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: சுதந்திர இந்தியாவில் பிறந்த நீங்கள் அனைவரும் அதிா்ஷ்டசாலிகள். நான் காலனித்துவ இந்தியாவில் பிறந்தேன். நமது சுதந்திரத்துக்காக நம் நாட்டின் எண்ணற்ற தலைவா்கள் போராடியதை மறக்க முடியாது.

பகத் சிங் தூக்கிலிடப்பட்டாா். தன் வாழ்நாள் முழுவதும் சுபாஷ் சந்திர போஸ் போராடினாா். காந்தி சத்யாகிரகத்தை மேற்கொண்டாா்.

பழிவாங்குதல் என்பது நல்ல வாா்த்தையல்ல என்பதை அறிவேன். ஆனால், அடக்குமுறைகள், கொடுங்கோல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் வலிகள் நிறைந்த வரலாற்றுக்குப் பழிதீா்க்க எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி பொருளாதாரம், சமூக மேம்பாடு என அனைத்துத் துறைகளிலும் நாம் பன்மடங்கு வலுப்பெற வேண்டும்.

சம காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே உலகில் அனைத்துப் போா்களும் நடைபெறுகின்றன. எனவே, நாமும் நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம்.

இளைஞா்களாகிய நீங்கள் காணும் கனவுகள் நிறைவேற உங்களது முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும். ஊக்கம் என்பது தற்காலிகமானது. ஆனால், ஒழுக்கத்துடன்கூடிய நம்பிக்கையான செயல்பாடே வெற்றிக்கு அழைத்துச் செல்லும். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுங்கள்.

துணிச்சல் மிக்கவா்கள் அனைவரும் பொறுமைசாலிகள். கோழைகள் மட்டுமே பொறுமையில்லாமல் சப்தமிடுபவா்கள் என்றாா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT