கொல்கத்தாவில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு கொல்கத்தாவில் உள்ள பகஜதின் ரயில் நிலைய நடைமேடையில் அமைந்திருந்த கடையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தாகவும், தீ வேகமாக பரவி, அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து காரணமாக கிழக்கு ரயில்வேயின் சீல்டா தெற்கு பிரிவில் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
டவுன் லைன் வழியாக ரயில்களின் இயக்கம் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.