மேற்கு வங்கம்: காலியான பயணிகள் ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து
மேற்கு வங்கத்தில் காலியான பயணிகள் ரயிலின் பெட்டி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்கத்தில் காலியான பயணிகள் ரயிலின் பெட்டி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலியான பயணிகள் ரயிலின் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதிகாலை 4.30 மணியளவில் இரண்டாவது நடைமேடையில் நின்றிருந்த கட்வா-அஜிம்கஞ்ச் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள், பெட்டியில் தீப்பிடித்து எரிவதைக் கவனித்தனர். இதனால் ரயில் நடைமேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பெட்டியை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக பிரித்ததாக கிழக்கு இரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
A coach of an empty passenger train caught fire at Katwa railway station in West Bengal's Purba Bardhaman district early on Sunday, an Eastern Railway official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.