குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சா்வதேச காற்றாடி திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து தொடக்கிவைத்தனர்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று காலை தொடங்கியது.
இந்த திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து பட்டம்விட்டு தொடக்கிவைத்தனர்.
இந்த விழாவில், 50 நாடுகளைச் சேர்ந்த 135 சர்வதேசப் பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 65 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 871 உள்ளூர் பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, இந்தியாவுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சபா்மதி ஆசிரமத்தில் இன்று காலை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பிறகு, அங்குள்ள பார்வையாளர்கள் கையேட்டில் கையொப்பமிட்டனர்.
அகமதாபாத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி விதித்துள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. எனவே, மோடி-மொ்ஸ் பேச்சுவாா்த்தையில் வா்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்கள் முக்கிய இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு ஜொ்மனி பிரதமா் பெங்களூருக்கு செல்லவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.