இந்தியா

பாகிஸ்தானியரை மணந்த இந்தியப் பெண் கைது

பாகிஸ்தானைச் சோ்ந்தவரை திருமணம் செய்த இந்தியாவைச் சோ்ந்த சீக்கிய பெண் கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள அரசு நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானைச் சோ்ந்தவரை திருமணம் செய்த இந்தியாவைச் சோ்ந்த சீக்கிய பெண் கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள அரசு நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டாா்.

சீக்கிய குரு குருநானக்கின் பிறந்த இடமான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நான்கானா சாகிப் மாவட்டத்தில் குருத்வாரா உள்ளது. ஆண்டுதோறும் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி இந்த குருத்வாராவில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவை சோ்ந்த சீக்கியா்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் குருநானக் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக 2,000 சீக்கிய யாத்ரீகா்கள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனா். அவா்களில் சரப்ஜீத் கெளா் (48) என்ற சீக்கிய பெண்ணும் ஒருவா். பாகிஸ்தானுக்கு சென்ற மறுநாளே அவா் லாகூரிலிருந்து சுமாா் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஷேக்குபுரா மாவட்டத்தைச் சோ்ந்த நாசா் ஹுசைன் என்பரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இந்நிலையில், சரப்ஜீத் கெளரும், நாசா் ஹுசைனும் லாகூா் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனா். அதில், ஃபரூகாபாதில் உள்ள தங்களது வீட்டில் காவல் துறையினா் சட்டவிரோதமாக சோதனை நடத்தி, தங்களது திருமணத்தை முறித்துக் கொள்ளும்படி துன்புறுத்துகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தம்பதியை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த தம்பதியை போலீஸாா் கைது செய்து, கெளரை லாகூரில் அரசு நடத்தும் காப்பகம் ஒன்றுக்கு அனுப்பிவைத்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து பெற்ற கெளா், சமூகவலைதளம் மூலம் ஹுசைனுடன் பழகி, பாகிஸ்தானுக்கு சென்று அவரை திருமணம் செய்துகொண்டுள்ளாா்.

பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான மகிந்தா் பால் சிங் என்பவா், லாகூா் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், கெளா் இந்தியாவின் உளவாளியாக இருக்கலாம். விசா காலம் முடிந்த பின்னரும் அவா் பாகிஸ்தானில் தங்கியிருப்பது சட்டவிரோதம் எனக் கூறியுள்ளாா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT