ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில், ஈரான் அரசுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்கள் இன்று (ஜன. 16) நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பொருளாதார நெருக்கடிகளால் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஈரான் அரசுக்கு ஆதரவாக இன்று (ஜன. 16) காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஈரானின் இந்த நிலைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள்தான் காரணம் எனக் கூறி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இதுபற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீரின் அஞ்சுமான் - இ- ஷரியே ஷியான் அமைப்பின் தலைவர் அகா சையத் ஹசன் அல் மூசாவி அல் சஃபாவி கூறியதாவது:
“ஈரானை பலவீனப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அழுத்தம், ஊடகப் போர் மற்றும் தந்திரங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் தோல்வியடைந்தன. ஈரானின் உறுதி, விழிப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத எதிர்ப்பு ஆகியவற்றின் முன் அவை எதிர்காலத்திலும் தொடர்ந்து தோல்வியடையும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி மீது நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள் எனவும், வெளிநாடுகளின் அழுத்தம், பிரசாரங்களுக்கு ஈரான் நாடு அடிபணியாது என்பதை அவர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.