சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை மத்திய அரசு இன்று (ஜன. 16) தடை செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபடும் பயனர்கள், அதிலும் குரிப்பாக இளையோர், தங்கள் பணத்தை இழப்பதை தடுப்பதில் அரசு தீவிரமாக இருப்பதை இன்றைய நடவடிக்கை பிரதிபலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், இதுவரை 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.