முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லம் ENS
இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார செலவு ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சங்களா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார கட்டணமாக மாதந்தோறும் ஓர் ஆடம்பர காருக்கான தொகை செலவிடப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார கட்டணமாக மாதந்தோறும் பல லட்சங்கள் செலவிடப்படுகிறது.

தொழிலதிபரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் வீடான ஆன்டிலியா (Antilia) பல்வேறு வசதிகளுடன் சிறு நகரமாகவே கருதப்படுகிறது.

27 தளங்களைக் கொண்ட ஆன்டிலியாவில் உடற்பயிற்சிக் கூடம், திரையரங்கு, நீச்சல் குளம், மாடித் தோட்டம், 150-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங், 3 ஹெலிபேடுகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டில் 1.120 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, 2010-ல் ஆன்டிலியா கட்டி முடிக்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு, ரூ. 15,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் 24 மணிநேரமும் தூய்மைப் பணி , சமையல் வேலை, தோட்ட வேலை, பாதுகாப்பு வேலை என நூற்றுக்கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில், ஆன்டிலியாவில் ஒரு மாதத்தில் 6,37,260 யூனிட்டுகள் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், ஆன்டிலியாவின் மின்சார கட்டணமாக மாதந்தோறும் அம்பானி குடும்பத்தினர் ரூ. 70 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரையில் செலுத்துவதாகத் தெரிகிறது. ஓர் ஆடம்பர ரக காரின் விலையை மாதந்தோறும் மின்சார செலவுக்காக அம்பானி செலவிடுவதாக இணையவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Ambani's Rs 15000 Cr Antilia's monthly electricity bill is enough to buy a BMW

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடைநிலை, பகுதி நேர ஆசிரியா்கள் சென்னையில் தொடா் போராட்டம்

திருக்கடையூரில் மாடுகள், குதிரைகள் எல்கைப் பந்தயம்

தொடா் விடுமுறை: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

12 முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு விருது: கல்வித் துறை தகவல்

பொங்கல் பண்டிகை: உழவா் சந்தைகளில் ரூ.1.53 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

SCROLL FOR NEXT