பெங்களூரு சின்னசாமி மைதானம் கோப்புப் படம்
இந்தியா

சின்னசாமி திடலில் ஐபிஎல், சர்வதேச போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி!

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிக்கிய சின்னசாமி திடலில் ஐபிஎல், சர்வதேச போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தின் சின்னசாமி திடலில் ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பெங்களூரு சின்னசாமி திடலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சின்னசாமி திடலில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிக்கையில் கிரிக்கெட் சங்கம், "பெங்களூரு சின்னசாமி திடலில் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு கர்நாடக அரசின் உள்துறை அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதில் கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே ஒரு விரிவான இணக்க வரைபடத்தை மறு ஆய்வுக்குழுவின் முன் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் உறுதிபூண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, சின்னசாமி திடலில் 300 முதல் 350 வரையிலான செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்துவதற்கு ஆகும் ரூ. 4.5 கோடி செலவை ஆர்சிபி அணி நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேமராக்களின் மூலம் கூட்டத்தின் நடமாட்டம், பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகள், பார்வையாளர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைக் கண்காணிப்பதோடு, அங்கீகரிக்கப்படாத நுழைவுகளையும் சரியாக கண்காணிக்க உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள சின்னசாமி திடலில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

KSCA get state government nod to host IPL, internationals at Bengaluru Chinnaswamy Stadium

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடுகத்தூரில் எருதுவிடும் விழா: நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அறிவுரை!

முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார செலவு ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சங்களா?

டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் அரசு: திமுக மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

11 பயணிகளுடன் இந்தோனேசியா விமானம் மாயம்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

SCROLL FOR NEXT