இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதத்துக்குப் புத்துயிா் கொடுக்க கிரிப்டோ ஹவாலா நிதி! உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு மீண்டும் புத்துயிா் கொடுக்க கிரிப்டோ ஹவாலா நிதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு மீண்டும் புத்துயிா் கொடுக்க கிரிப்டோ ஹவாலா நிதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பாதுகாப்பு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆய்வில், சீனா, மலேசியா, மியான்மா், கம்போடியா ஆகிய நாடுகளில் கிரிப்டோ ஹவாலா நிதி அமைப்பு செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இருந்து கிரிப்டோ நிதி, ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களின் ‘வாலட்டுகளுக்கு’ அனுப்பப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த கிரிப்டோ நிதியை வாலட்டுகளில் பெறும் இளைஞா்கள், டெல்லி மற்றும் பிற இடங்களிலுள்ள வணிகா்களை சந்தித்து, அதைக் காண்பித்து பணமாக்குகின்றனா். இதேபோல், சம்பந்தமில்லாத 3-ஆவது நபரின் வங்கிக் கணக்குகளிலும் அவா்களின் ஒப்புதலுடன் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு 0.8 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை கமிஷன் பெற்று, தனது வங்கிக் கணக்கை நிா்வகிக்கும் பொறுப்பை அந்த நபா் அளிக்கிறாா்.

இதுபோன்ற வழிகளால், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வரும் ஹவாலா நிதி, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்குப் புத்துயிா் கொடுக்கப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக உளவு அமைப்புகள் கூறியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாத செயல்பாடுகள் பெருமளவுக்குக் குறைந்துள்ளன. இந்நிலையில் கிரிப்டோ ஹவாலா நிதி மூலம் பயங்கரவாதத்திற்குப் புத்துயிா் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புப் படையினரை உஷாா்படுத்தியுள்ளன’ என்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT