விபி ஜி ராம் ஜி சட்டத்தால் மாநில அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்தின் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அப்போது விபி ஜி ராம் ஜி சட்டம் குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பேசியதாவது:
”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் கேரளம் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு விபி ஜி ராம் ஜி சட்டமாக மாறியிருப்பது கேரளத்துக்கு பின்னடைவாகும். ஏனெனில், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி உதவி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதுதொடர்பான கவலைகளை மத்திய அரசிடம் எங்கள் அரசு எடுத்துரைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகைதந்த மாநில ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.