முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

விபி ஜி ராம் ஜி திட்டம்: நாளை பேரவையில் சிறப்புத் தீர்மானம்! - முதல்வர் அறிவிப்பு

விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம்...

இணையதளச் செய்திப் பிரிவு

விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக நாளை(ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நாளை(ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.

"விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நாளை இதுதொடர்பாக அரசின் சார்பில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. எனவே தீர்மானத்தின் மீது விரிவாக பேசுவோம்" என்று கூறினார்.

special resolution regarding VP G Ram G scheme presented in assembly tomorrow: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் எடையைக் குறைக்க இந்த நீரைக் குடியுங்கள்!

கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகும் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம்! அடுத்து என்ன?

3 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்!

தேநீர் விற்பவர் என பொய்ப் பிரசாரம்: பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள... முகாம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT