கோப்புப் படம் 
இந்தியா

167 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

7 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவையாகவும், 7 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 167 மருந்துகள் தரமற்றவையாகவும், 7 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்துகொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

வெகுவிமர்சையாக நடைபெற்ற நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

விஜய்யைப் பார்த்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்! காதை மூடி சிரித்த விஜய்! | TVK

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகள் திறப்பு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT