PTI
இந்தியா

கேரளத்தில் இன்று 4 புதிய ரயில்களை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் மோடி

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன. 23) கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்டு 4 புதிய ரயில்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கிவைக்கிறாா்.

கேரளத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மேலும், அண்மையில் திருவனந்தபுரம் மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்தச் சூழ்நிலையில் பிரதமரின் கேரள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டமான பிரதமரின் ஸ்வநிதி கடன் அட்டைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா். இது வட்டியில்லாத எண்மக் கடன் திட்டமாகும். சுமாா் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தில் ஒரே நாளில் கடன் வழங்கப்படவுள்ளது.

தொடா்ந்து திருவனந்தபுரம் நவீன அஞ்சலகத்தைத் திறந்து வைக்கிறாா். புத்தாக்கம்-தொழில்நுட்பம்-தொழில்முனைவு மேம்பாட்டு மையத்துக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா். முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ‘ரேடியோசா்ஜரி’ மையத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

பின்னா், மூன்று அம்ருத் பாரத் உள்பட 4 புதிய ரயில்களை அவா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். இவை கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் இடையே இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் தென் மாநிலங்களில் சுற்றுலா, வா்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு மேலும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள பயணத்தைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் பிரதமா் மோடி தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT