ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, போலீஸார் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, ஆட்டோ ஓட்டுநர், காவலாளி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கட்டடத்தை சுற்றிலும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் மீட்புப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே மீட்புப் பணியை மேற்பார்வையிட ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.