@BROindia
இந்தியா

ஜம்மு: சாலையில் 6 அடி உயரத்துக்கு 38 கி.மீ. படர்ந்த பனி! வெளியேற முடியாமல் தவித்த 40 வீரர்கள் பத்திரமாக மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு!

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் கடந்த இரு நாள்களாக கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடந்த ஜன. 23 சுமார் 40 மணி நேரம் நீடித்த பனிப்பொழிவால், அம்மாவட்டத்தை இணைக்கும் சாலைகளில் 38 கி.மீ. தொலைவுக்கு சுமார் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கடல்மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதேர்கலா பாஸ் பகுதிகளிருந்து வெளியேற முடியாமல் ராஷ்டிரீய ரைஃபில்ஸ் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 40 வீரர்கள் உள்பட மொத்தம் 60 பேர் தவித்தனர்.

தகவலறிந்து அவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில், எல்லையோரச் சாலைகள் அமைப்பான பிஆர்ஓ குழுவினர் கடந்த ஜன. 24 தொடங்கி இரு நாள்களாக ஈடுபட்டனர். இந்த நிலையில், மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், சாலைகளில் தேங்கியிருந்த பனி அகற்றப்பட்டு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(ஜன. 27) தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மோசமான வானிலையால், ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

J-K: 40 soldiers among 60 rescued from snowbound stretch in Doda after being stranded

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி டாக்ஸ் டிரைலர்!

நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

அனந்த் ராஜ் 3வது காலாண்டு லாபம் 31% உயர்வு!

ஜென் ஸி போராட்டம் : நேபாள சிறையிலிருந்து தப்பிய குஜராத் இளைஞர் கைது!

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

SCROLL FOR NEXT