FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிரீன்லாந்தை அறிவோம்...

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் பரப்பளவு சுமார் 8,86,330 சதுர மைல். ஆர்க்டிக், வட அட்லாண்டிக் கடல்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது.

2 பிப்ரவரி 2026, 10:27 pm IST
பகிர்:

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் பரப்பளவு சுமார் 8,86,330 சதுர மைல். ஆர்க்டிக், வட அட்லாண்டிக் கடல்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது. அமெரிக்கா, ரஷிய நாடுகளுக்கு நடுவே இருக்கிறது என்பதால், வியூக நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடம். இதனால், கிரீன்லாந்தை அடைய அமெரிக்காவுக்கு விருப்பம் அதிகம்.

மக்கள் குறைவாக வசிக்கும் கிரீன்லாந்தில் இருப்பதோ சுமார் 56 ஆயிரம் பேர்தான். 80 சதவீதம் பனி நிரம்பிய பகுதி என்பதால், அதிகபட்சமாக வெப்ப நிலை 10 டிகிரி சென்டிகிரேட். இதனால், 'வெள்ளை' அல்லது 'ஒயிட்லாந்து' என்றே பெயர் பெற்றிருக்க வேண்டும்.

பின்னர் ஏன் கிரீன்லாந்து என்று அழைக்கப்படுகிறது?

Advertisement

Advertisement

'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிரம்பி கிரீன்லாந்து பசுமையாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பசுமையின் மேல் சுமார் 2 மைல் உயரத்துக்கு பனி மூடப்பட்டிருக்கலாம்' என்று விஞ்ஞானிகளின் கருதுகின்றனர்.

982-இல் 'எரிக் த் ரெட்' என்னும் குற்றவாளி நார்வேயின் அருகேயில் உள்ள ஐஸ்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். மற்றவர்களும் அங்கு குடியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் அந்த பெரிய தீவுக்கு 'கிரீன்லாந்து' என்று பெயரிட்டார்.

கிரீன்லாந்து, ஐரோப்பாவின் டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமானது. பூகோள ரீதியாக வட அமெரிக்காவையொட்டி இருந்தாலும், அரசியல், பண்பாடுகளுக்கு ஐரோப்பா கண்டத்தையே சார்ந்துள்ளது. கிரீன்லாந்துக்கு அரசியல், பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளைத் தவிர மற்றவைகளுக்கு சுயாட்சியை டென்மார்க் வழங்கியுள்ளது.

13-ஆம் நூற்றாண்டில் வட ஐரோப்பாவில் இருந்து இங்கு குடியேறியவர்கள் பெரும்பாலும் கனடா, அலாஸ்கா போன்ற ஆர்க்டிக் வட்டத்தை ஒட்டிய குளிர்பிரதேசங்களிலும் குடியேறியிருக்கின்றனர். 'இனூயிட்' என அழைக்கப்படும் இவர்கள், தங்களை 'எக்சிமோக்கள்' என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை.

பெரும்பான்மையினோர் 'டானிஷ்', 'கிரீன்லாந்திக்' ஆகிய மொழிகளைப் பேசும் கிரீன்லாந்துவாசிகள். அண்மைக்காலங்களில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கியுள்ளனர். 'காயக்', 'இக்லூ' போன்ற கிரீலாந்திக் மொழியின் சொற்கள் மற்ற மொழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கிரீன்லாந்தின் தலைநகரம் நூக். பெரிய கண்டமான அமெரிக்காவையொட்டிய தீவாக இருந்தாலும், ரயில் போக்குவரத்தும் சாலைப் போக்குவரத்தும் இல்லை. சிறிய நகரத்துக்குள் உள்ள சாலைகள் அந்த நகரத்தோடு முடிவடைகின்றன. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள், நாய்களால் இழுக்கப்படும் ஸ்லெட்ஜுகள் ஆகியன பயன்பாட்டில் உள்ளன.

மீன் பிடிக்கும் தொழில் அதிகம். சீல், திமிங்கல வேட்டைகள் நடைபெறுகின்றன என்றாலும், அவற்றின் இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை உள்ளது. மீன்களைத் தவிர மற்ற பொருள்கள் இங்கு இறக்குமதியாகின்றன.

எண்ணெய், அரிய வகைத் தனிமங்கள் நிறைந்துள்ள இங்கு குளிர், பனி ஆகியன அவற்றை எடுப்பதற்குத் தடையாக இருக்கின்றன. உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருப்பதால் கிரீன்லாந்திலும், அதைச் சுற்றியுள்ள பனிகளும் உருகத் தொடங்கலாம். அது மற்ற இடங்களின் கடல் மட்டத்தை உயர்த்துவதுடன் உலக வெப்பநிலை மாற்றத்துக்கும் காரணமாக அமையலாம்.

ஆண்டுதோறும் மே 25 முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை சூரியன் மறைவதில்லை. நள்ளிரவில் சூரியன் இருக்கும் பிரதேசம். ஜூன் 21-ஆம் தேதி நீண்ட நாளாகும். அது கிரீன்லாந்தின் தேசிய தினம். மக்கள் சூரிய ஒளியில் மகிழ்ச்சியுடன் நனைந்து கொண்டிருப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments