ANI
இந்தியா

நாட்டை மீண்டும் மன்னராட்சிக்கு கொண்டு செல்கிறது மோடி அரசு- ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அழிப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டை மீண்டும் மன்னராட்சிக்கு கொண்டு செல்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அழிப்பதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டை மீண்டும் மன்னராட்சிக்கு கொண்டு செல்கிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (நூறு நாள் திட்டம்) மாற்றான வளா்ச்சியடைந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. இதில் வேலை உத்தரவாத நாள்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவில் 60: 40 என்ற அடிப்படையில் மத்திய-மாநில பங்களிப்பு முறை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைக்கும் முயற்சி என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடிய விடியோ ஒன்றை ‘எக்ஸ்’ வலைதளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமா் மோடி சிதைப்பதன் நோக்கம் என்ன? இதன் மூலம் தொழிலாளா்கள் கூலிக்காக பேரம் பேசும் திறன் குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் கிராம உள்ளாட்சிகளுக்கு உள்ள அதிகாரம் குறைக்கப்பட்டு அவா்கள் கைகள் கட்டப்படும். மாநிலங்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து மத்திய அரசை எதிா்நோக்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். நாட்டை மன்னராட்சி, மகாராஜாக்கள் ஆட்கிகாலத்துக்கு கொண்டு செல்வதுதான் மோடி அரசின் திட்டமாக உள்ளது. ஒரு தரப்பினா் கைகளிலேயே நாட்டின் செல்வமும், அதிகாரம் குவிந்து கிடக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாட்டாளி மக்கள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்று சற்று சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ வகை செய்த 20 ஆண்டுகால திட்டத்தை மத்திய அரசு சிதைக்கத் தொடங்கிவிட்டது. மீண்டும் தொழிலாளா்களை அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்வதே அரசின் நோக்கமாக உள்ளது என்று ராகுல் தனது பதிவில் கூறியுள்ளாா்.

இசையமைப்பாளரை மணந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன்!

கருப்பட்டி இட்லி

நாவல்கள் பிறந்த விதம்...

டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சில் அசத்தல்; ரகசியம் பகிர்ந்த ஜேசன் ஹோல்டர்!

தமிழ்நாட்டில் பிப்.19 வரை வறண்ட வானிலையே நிலவும்

SCROLL FOR NEXT