படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் உணவுப் பட்டியலில் அசைவ உணவுகள் சேர்க்கப்பட உள்ளது. மேற்கு வங்கத்தின் ஹெளரா, கமக்யா இடையே நாட்டின் முதலாவது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி ஜன. 17 தொடங்கிவைத்தாா். இந்த ரயில் சேவையானது, கடந்த ஜன. 22 முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், அந்த ரயிலில் அசைவு உணவுகள் வழங்கப்படாததால் பெரும்பாலான பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, இது குறித்து ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கான உணவுப் பட்டியலில், அசைவ உணவுகள் சேர்க்கப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில் இந்த வசதி அறிமுகமாகும் என்று கிழக்கு ரயில்வே தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.